மூளை வளர்ச்சியில்லாத காங்கிரஸ்… 6 வருடம் வீணாக்கிட்டேன்: குஷ்புவின் கோபமும் வருத்தமும்!

kushboo-joined-bjp
kushboo-joined-bjp

காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி அதில் 6 வருடத்தை வீணாக்கிவிட்டேனே என்று கூறியுள்ளார், நேற்று பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பூ.

காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட நடிகை குஷ்பூ பின்னர் பாஜகவில் நேற்று இணைந்தால் இதற்காக சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்று இருந்தார் குஷ்பூ

 இந்நிலையில் இன்று தில்லியிலிருந்து சென்னை திரும்பிய குஷ்பூவுக்கு தமிழக பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு பாஜக., தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து, மலர் தூவி வரவேற்பு தெரிவித்தனர். 

 பின்னர் விமான நிலையத்தில் வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்த பிறகே தான் நடிகை என காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்ததா என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை;  6 ஆண்டுகளை அக்கட்சியில் வீணாக்கிவிட்டேன் என்று குஷ்பூ வருத்தப்பட்டார்.

பாஜக.,வில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பா.ஜ., தமிழக தலைவர் எல் முருகன் முயற்சியால் நான் பாஜக.,வில் இணைந்தேன். கட்சியை நடத்துவதற்காக, அனைவரிடமும் பேசி, தனது கட்சி தான் நாட்டிற்கு நல்லது செய்யும் என அனைவரிடமும் பேசுகிறார். 

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஆனால், காங்கிரஸ் கட்சி தலைவர், 6 வருடம் கழித்து நான் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு நடிகையாகவே என்னைப் பார்ப்பதாகக் கூறுகிறார். கொஞ்சமும் சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி  இல்லாத ஒரு கட்சி காங்கிரஸ். அங்கே இருக்கும் போதும் மரியாதை இல்லை. வெளியேறும் போதும் மரியாதை இல்லை. அவர்களின் குற்றச்சாட்டிற்கு கமலாலயம் சென்ற பிறகு தான் பதிலளிக்க முடியும்.

6 ஆண்டுகளாகக் கட்சியில் இருந்தும் என்னுடைய உழைப்பிற்கு மரியாதை கிடைக்கவில்லை. திமுக.,வில் இருந்து வெளியே வரும் போது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. காங்கிரசில் இருந்து வெளியேறிய போதும் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. ஆனால், அங்கிருந்து என்னை பற்றி தவறான குற்றச்சாட்டு வரும் போது, அதற்கு பதிலடி கொடுப்பேன்  என்றார் குஷ்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories