அமமுக. பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!

Published:

vetrivel-ammk
vetrivel-ammk

டிடிவி தினகரனின் வலதுகரமாகத் திகழ்ந்தவரும், அமமுக., பொருளாளருமான வெற்றிவேல்,  இன்று காலமானார்.  கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது

கொரோனா தொற்றுக்காக போரூர் ராமசந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட வெற்றிவேலுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,  சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் திறன் அற்ற நிலையில், அவர் அக்.15 இன்று காலமானார். 

வெற்றிவேல், அதிமுக.,.வின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர். அதிமுக., எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். 

பின்னாளில் அதிமுக.,வில் இருந்து அமமுக பிரிந்து தனிக்கட்சி தொடங்கப் பட்ட நிலையில், டிடிவி தினகரனை நம்பி அவர் பின்னணியில் நின்று, அமமுக.,வில் இணைந்து பணியாற்றினார். அ.ம.மு.க. பொருளாளராக அவர் பணியாற்றி வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img