கொரோனா ஊரடங்கிலும்… நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் பயிற்சிகள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சுய முன்னேற்றம் மதுரை லைஃப் ஸ்டைல்
training-in-corona-time
training-in-corona-time

கொரானா ஊரடங்கு காலத்தில் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் மதுரை ஆனையூரில் மாணவ மாணவிகள், வீட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய வகையில் கற்றுகொடுக்கப்படும் ஸ்போக்கன் இங்கிலீஷ், தையல், அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகள்…

கொரானா ஊரடங்கு காலத்தில் ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டதோடு ஆண்கள், வீட்டு பெண்கள், மாணவ மாணவிகள் வீட்டிலேயே நேரத்தை வீணாக செலவிட்டனர்..

அந்தவகையில் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையிலும் சுயதொழில்வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் மதுரை மாவட்டம் ஆனையூரில் உள்ள ஸ்ருஷ்டி பயிற்சி மையம் மூலம் குளோபல் அகாடமி சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவசமாக எளிதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில் இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பை பாலமுருகன் என்பவர் நடத்தி வருகிறார்.

இதன்மூலம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.

training-in-corona-time1
training-in-corona-time1

அதனை தொடர்ந்து மத்தியில் அரசின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஸ்ருஷ்டி பயிற்சி மையத்தில் தமிழ்செல்வி என்பவர் வீட்டு பெண்கள், இளம்பெண்களுக்கு சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் தையல் பயிற்சி, அழகுகலை, எம்பிராய்டிங் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் எவ்வித கட்டணமில்லாமல் இலவசமாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் பெண்கள், மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடன் பயன்பெற்று செல்கின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.