சமரசம் சாத்தியமாகுமா?

Published:

"சமரசம் சாத்தியமாகுமா?" 
தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா 
தமிழில் -ராஜி ரகுநாதன்.
உலகின் பல நாடுகளிலும் காணப்படும் இரண்டு மதங்களில் பிரதானமாக உள்ள ஒரே லட்சணம், "தம் மதமே சிறந்தது. இதர சித்தாந்தங்கள் பயனற்றவை. தம் மதத்திற்கு மற்றவர்களை மாற்றி விட வேண்டும். உலகம் முழுவதும் தாமே ஆள வேண்டும்". இந்த பாவனை உள்ளதால்தான் துவேஷமே தம் சுபாவமாகக் கொண்டுள்ளார்கள்.
இதன் காரணமாக பல நாடுகளில் அமைதியின்மை, ஹிம்சை, தீவிரவாதம் அவிழ்த்துவிடப்பட்டுள்ளதென்பது யதார்த்தம். 
இவ்விரண்டு மதங்களையும் சேர்ந்தவர்களுக்கு வேதனை தரும் அம்சம் என்னவென்றால், பல நூற்றாண்டுகளாக ஹிம்சை, துவம்சம், பேராசை போன்ற வழிகளில் எத்தனை விதமாக நாசம் விளைவித்தாலும் பாரத தேசத்தில் ஹிந்து மதம் இன்னும் உயிரோடு இருப்பதுதான். அதனால்தான் நம் உயர்ந்த சனாதன தர்மத்தின் உத்தமமான அம்சங்களைக்  கூட விபரீதமான கோணத்தில் வியாக்யானம் செய்தும் ஏளனம் செய்தும் பிரசாரங்கள் செய்து வருகின்றனர். 
தம் மதத்தை பரப்புவது சட்டப்படி குற்றமாகாது என்பது உண்மையே. ஆனால் அவர்களின் எல்லா பிரச்சார நிகழ்ச்சிகளிலும் பிறருடைய தர்மங்களை அவமானப் படுத்துவதே நிகழ்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒத்தாசையாக ஹேது வாதிகள் என்று கூறிக் கொள்ளும் பரம அல்ப சித்தாந்தவாதிகளான நாத்திகர்கள் அவர்களை உசுப்பி விடுகிறார்கள். அவர்களுக்கு இவ்விரண்டு மதங்களிலும் உள்ள தீமைகள் கண்ணில் பட மாட்டா. ஹிந்து தெய்வங்களையும்  நூல்களையும் மட்டுமே தூஷித்தவண்ணம் உரையாற்றுவார்கள். எழுதுவார்கள். எங்களுக்கு கருத்து சுதந்திரம்  உண்டு என்று கூக்குரலிடுவார்கள். 
ஆயின், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோடிக்  கணக்கானவர்கள் வழிபட்டு பூஜித்து கவுரவிக்கும் தெய்வங்களையும் மகா புருஷர்களையும் தூஷிப்பதன் மூலம் மனித இனத்திற்கு அவர்கள் செய்யக் கூடிய பெரிய உபகாரம் எதுவும் இல்லை. இம்மூன்று விதமான சகிப்புத் தன்மையற்ற கொள்கையாளர்களுக்கு பொறுமை குணம் கொண்ட ஹிந்து தர்மத்தின் மீது ஆத்திரம், கோபம். 
எந்த ஒரு மதமும் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கும் சனாதன தர்மத்திற்கு பிற மதத்திடம் துவேஷம் ஏற்படுவது இல்லை. அதனால்தான் மத சமரசம், பிற மத சகிப்புத் தன்மை போன்ற சொற்களை ஹிந்து தர்மத்தில் பிறந்தவர்கள் மட்டுமே சொல்ல முடியும். 
ஆனால் உலகம் முழுவதும் தம் மதமே பரவ வேண்டுமென்ற பேராசை கொண்டுள்ள கொள்கையாளர்கள், அவர்களின் நாடுகளில் சிறுவயது முதலே தம் மதங்களுக்கு அனுகூலமாகவும் ஹிந்து தர்மத்திற்கு எதிராகவும் போதனை செய்து வருகின்றனர்.  பள்ளிகளில் பாட புத்தகங்களில் ஹிந்து தர்மத்தின் மீது துவேஷத்தை விபரீதமாக போதித்து வருகிறார்கள். 'பல தெய்வங்களை வணங்கும் மதம் ஹிந்து மதம். அம்மதத்தினர் பசுவையும் பாம்பையும் பூஜிக்கும் மூடர்கள். ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவர் வெறுப்பவர்கள்' என்ற சொற்களையே சிறு வயது முதல் கற்று தருகிறார்கள். அந்த பள்ளிகளில் பயிலும் ஹிந்து மாணவர்களும் கூட இவற்றையே பயில வேண்டி உள்ளது. அப்பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உண்மையை உசிதமாக எடுத்துக் கூறுவதில்லை.  கூறக்  கூடிய அளவுக்கு அவர்கள் ஹிந்து மதம் பற்றி அறிந்து கொள்ள வில்லை. அதனால் குழந்தைகளிடம் சகஜமாக நம் தர்மத்தின் மேல் தாழ்வு மனப்பான்மையும் பிறரிடம் கௌரவ மனப்பான்மையும் வளர்ந்து வருகின்றன. 
மதத்திற்கு அப்பாற்பட்டு நடந்து கொள்கிறோம் என்று கூறிக் கொள்ளும் பள்ளிகளில் கூட இத்தகைய வேறுபாட்டு நோக்கம் காணப்படுகிறது. துவேஷம் இருந்தால் பிறரிடமுள்ள குணங்கள் கூட குற்றங்களாகவே தென்படும். அவற்றையே பிரச்சாரம் செய்வார்கள்.  
இத்தகைய துவேஷம் நிரம்பிய மதங்களின் பலவீனத்தால் மத சமரசம் என்பது எட்டாத பழமாகிவிட்டது. நாட்டு நலன் குழப்பத்திற்குள்ளாகிறது. பிரசாரத்தின் வழியே மத மாற்றம் என்ற லட்சணம் அற்ற ஹிந்து தர்மம், இவர்களின்  துவேஷம், தூஷணை  மற்றும் மத மாற்றங்களுக்கு ஆட்பட்டு இரையாகிக் கொண்டே இருக்கிறது. 
உண்மையில் மனித சமுதாயத்தின் நலனை, மத சமரசத்தைக் கோருபவையாக இருந்தால், உலக நாடுகள் சர்வ தேச ரீதியாக சில நிர்ணயங்களை அமல்படுத்த முன்வர வேண்டும். 
* எந்த நூலானாலும், மதங்களையும், அவற்றின் நம்பிக்கைகளையும் அவமானப்படுத்துமானால் அவற்றைத் தடை செய்ய வேண்டும். கருத்து  சுதந்திரம் எத்தனை இருந்த போதிலும், பெருவாரி மக்களின் மனோ பாவனைகளை துன்புறுத்துவதன் மூலம் பலன் எதுவுமில்லை. ஆதலால் அனுகூலமான நூல்களை எதுவும் செய்ய வேண்டியதில்லை. 
* அனைத்து மதங்களிலும் உள்ள நல்லவற்றை பிரச்சாரம் செய்ய விடுங்கள். தவறெதுவும் இல்லை. பிற மதத்தவரை மாற்றும் பிரயத்தனம், நிந்திக்கும் வழிமுறை மட்டும் கூடாது.  மதவாதிகளின் துர்மார்க்கங்களை மன்னிக்கக் கூடாது. மத நிந்தனைக்கு இடம் அளிக்கக் கூடாது. பிரச்சாரங்களில் பிற மதங்களை அவமதித்தால் கடினமாக தண்டிக்க வேண்டும். 
* பள்ளிப் பாடங்களிலோ பிறவற்றிலோ நிந்தைகள் நிறைந்த, அவமதிக்கும் விதத்தில் உள்ள விஷயங்களைக் கைவிட வேண்டும். அந்தந்த மதங்களிடம் கௌரவம், புரிதல் உள்ள அறிஞர்களைக் கொண்டு பாடப் புத்தகங்களைத் தயார் செய்விக்க வேண்டும். அன்றி, அவற்றின் மேல் துவேஷமுள்ளவர்களைக் கொண்டு எழுதுவிக்கக் கூடாது. 
* தம் மதத்தைத் தாம் கடைபிடித்தபடி, பிற மதங்களை கௌரவிப்பது என்ற நல்ல குணத்தை மனித இனத்திற்கு அறிவுறுத்தி பரப்ப வேண்டிய தேவை உள்ளது. 
* தம் மத பிரச்சாரத்தை தம் மத நூல்களின் மூலம் செய்யட்டும்.  நல்லதே. பிறருடைய நூல்களின் ஜோலிக்குப் போவது அனாவசியம். தமக்கென்று பவித்திரமான நூல்கள் இருக்கையில் பிற மத நூல்கள் கூட தம் மத தெய்வங்களையே போற்றுகின்றன என்று கூறுவது அபத்தம். முட்டாள்தனம். இது மத மாற்றத்திற்காக செய்யப்படும் சதி. அதனைத் தடுத்து நிறுத்தி அப்படிப்பட்ட செயல்களைத் தடை செய்ய வேண்டும். 
இந்த தீர்மானங்களை அரசாங்கங்கள் எடுக்குமோ இல்லையோ கூற இயலாது. ஒருவேளை அவை முன்வந்தாலும் இந்த இரண்டு மதங்களோடு சேர்ந்து நாத்திகர்களும் கூக்குரல் போட்டு குட்டை குழப்புவார்கள் என்பது நிச்சயம். ஆனால் சாமானிய மக்களிடம் இந்த புரிதலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நாட்டு நலனில் அக்கறை உள்ள அனைவரின் கடமையாகும். 
ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img