புகழ், பதவி முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும்: கமல் சாபம்

சற்றுமுன் தமிழகம்

சென்னை: கோவையில் நேற்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவில் மோதி இளைஞர் பலியான சம்பவத்தை அடுத்து, அதனைக் குறிப்பிட்டு, புகழும் பதவியும் மட்டும் முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் சாபம் அளித்துள்ளார்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் தன் சமூகக் கடமையை ஆற்றியுள்ள நடிகர் கமல், தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு சாபம் கொடுத்துள்ளார்.

அவரது பதிவில்… உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner”ஜி”க்கள் உணரவேண்டும் இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.