எருமை மாடு ஒன்று தாகம் தாங்காமல் தாகம் தீர்க்க அடிபம்பினை அடித்து தண்ணீர் அருந்தும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎஸ் அதிகாரியான டிபன்ஷு கப்ரா (Dipanshu Kabra) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் எருமை மாடுகள் கூட்டமாக நிற்கையில் ஒன்று மட்டும் தாகத்தை தணிக்க அருகில் இருக்கும் அடிபம்பை தனது கொம்பினால் முட்டி போராடி நீரினை அருந்தி வருகின்றது. பின்னர் அருகில் இருக்கும் மற்றொரு மாடும் தாகம் தீர்த்துக் கொள்கின்றது.
இந்த வீடியோவை இதுவரை 214.9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 154 ரீட்வீட் மற்றும் 15 லட்சம் லைக்ஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷா ட்விட்டரில் இதனை மூளைக்கு மேல் மூளை என குறிப்பிட்டு ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து எருமையின் அறிவை வியந்து வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஒருவர் இனி அறிவில்லையா எருமை என யாரையும் யாரும் திட்டக்கூடாது என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
अब बताओ – “अक्ल बड़ी या भैंस”? 😅 pic.twitter.com/ee4bipnEGZ— Dipanshu Kabra (@ipskabra) November 19, 2021