
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் .
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நுபுர் நாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இந்நிலையில் புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புவனேஸ்வர் குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து புவனேஸ்வர் குமார் அவருடைய மனைவி இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Today we welcome the biggest joy of our lives. 24.11.2021 pic.twitter.com/VlvcyjFEmW— Bhuvneshwar Kumar (@BhuviOfficial) November 24, 2021