
கர்நாடாக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள பாதாள ஆஞ்சநேயர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த கோவில் முன்பு பிச்சை எடுக்கும் கெம்பஜ்ஜி(80) என்ற மூதாட்டி கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த பக்தர்கள் மூதாட்டியை, தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி தான் கோவிலுக்கு நன்கொடை கொடுக்க வந்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனை நம்பாத பக்தர்கள் அவரை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் மூதாட்டி வெளியேற மறுத்துள்ளார்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ரமேஷ் மூதாட்டியிடம் விசாரித்தபோது, அவர் தான் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்தை நன்கொடையாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதனை நன்கொடையாக பெற்றுக்கொண்ட ரமேஷ் நடந்த தவறுகளுக்காக மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிச்சை எடுத்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய மூதாட்டியை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.