
தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் தென்கொரியா தொழில்நுட்பங்களில் அதிகம் முன்னேறிய நாடு. இங்கு ரோபோக்கள் மூலம் மழலையர் பள்ளிகளில் பாடங்கள் சொல்லி கொடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு உயர்ந்த நவீனமயமான தொழில்நுட்ப எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக சியோலில் உள்ள 300 நர்சரிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் இந்த குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்கள் உயர்ம் 25 செமீ. மட்டுமே. இவை ஆடல், பாடலுடன் குங்பூவையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறது.
இந்த ரோபோக்களுக்கு ஆல்பா மினி எனப் பெயர். இவைகள் குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொடுக்கின்றன. அதை பார்த்து குழந்தைகளும் அப்படியே செய்கின்றன.

இந்த ரோபோவின் தலையில் உள்ள கேமராக்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து பள்ளி மேலாளருக்கு அனுப்புகிறது.
இது குறித்து நர்சரி பள்ளியில் பயிலும் குழந்தை ஒன்று பாட்டு, நடனம் என எங்களோடு சேர்ந்து செய்வது மகிழ்ச்சியை அளிக்கின்றது எனத் தெரிவித்துள்ளது.