புதிய கல்விக்கொள்கை குறித்த விழிப்புணர்வு பேரணி கரூரில் பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஒரு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில் தொடங்கிய இந்த பேரணியில், கரூர் வெங்கமேடு எம்.ஜி.ஆர் சிலை அருகே துவங்கி, கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபம் வரை நடைபெற்றது.
முன்னதாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா வழியாக வந்த இந்த பேரணியில் நடுவே பா.ஜ.க கட்சியினர் வெடி வைத்தும், பா.ஜ.க வினர் உற்சாகமடைந்தனர். இந்த பேரணியில் பா.ஜ.க கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியில் பங்கேற்றார். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற போது, தமிழுக்கு மதிப்பு கொடுக்கக் கூடியவர்கள் வாடா, போடா என்று போஸ்டர்கள் அடிப்பார்களா ? என்று, திமுக., குறித்து விமர்சித்தார் அண்ணாமலை
ஹிந்தியினை முழுமையாக தமிழகத்தில் திணித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்! பா.ஜ.க வைப் பொறுத்தவரை தமிழகத்தில் கொள்கை முடிவில் தி.மு.க தான் எதிர்க்கட்சி என்று கூறினார் அண்ணாமலை.
கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த கல்விக் கொள்கை திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கே.பி.மோகன், நகுலன். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், இந்நிகழ்ச்சியில் தி.மு.க மற்றும் மதிமுக கட்சிகளில் இருந்து விலகி சுமார் 120 பேர் பா.ஜ.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு காவி துண்டுகளை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார் அண்ணாமலை.
பின்னர், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை இதில் கலந்து கொண்டு பேசிய போது…
பிரதமர் மோடி அவர்களின் இந்த மத்திய கல்விக் கொள்கை நல்ல கல்விக்கொள்கை. இது குறித்து பிரச்சார கூட்டமும் கரூரில் நடைபெற்றது. 2030 க்குள் ஒரு நல்ல வித்யாசமான கல்வித் திட்டம் உருவாகும்.
பாரத பிரதமர் மோடி அவர்களின் திட்டத்தில், தமிழக அளவில் பாதி அளவிற்கு பயனடைந்துள்ளனர். மேலும் மற்ற மாநில மக்கள் மத்தியில் தமிழக மக்கள் பாதியளவில் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மோடி அவர்களின் திட்டம் நன்றாகச் சென்றுள்ளது இந்த இரு வருடங்களில். பா.ஜ.க இப்படி தான் என்றும் அப்படி தான் என்றும் இருந்தவர்கள் மத்தியில் தற்போதுதான் பா.ஜ.க குறித்து நன்கு அறிந்துள்ளார்கள்.
புதிய வேளாண் மசோதா மற்றும் புதிய கல்விக் கொள்கை திட்டங்களில் வரும் நன்மைகள் குறித்து தற்போது தமிழக மக்கள் உணர்ந்துள்ளார்கள். கொள்கை முடிவில் தி.மு.க தான் எதிர்கட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த திட்டங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.
அடுத்த படியாக ஹிந்தி தெரியாது போடா ? என்று டீசர்ட் போட்டு கொண்டு ஆங்காங்கே சுற்றுகின்றனர். மொத்தமாகவே 100 டீசர்ட் தான் அடித்துள்ளார்கள். தமிழகத்தினைப் பொறுத்தவரை தமிழக பா.ஜ.க வும்தான் இந்தித் திணிப்பை விரோதப்படுத்தும்
தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணித்தவர்கள் காங்கிரஸ் காரர்கள் தான். 1965, 1968, 1986 ஆகிய ஆண்டுகளில் இந்தி மொழியை திணித்தார்கள்! இதையெல்லாம் தமிழக மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். இதைவிட்டுவிட்டு, இது தமிழ்நாடுடா? வாடா? போடா? என்றெல்லாம் போஸ்டர்கள் அடித்து தமிழை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
தமிழே தெரியாதவர்கள் தான் தமிழுக்காகப் போராட்டம் நடத்து பவர்களாக தி.மு.க வில் உள்ளனர். தி.மு.க வில் உள்ள முக்கிய தலைவர்கள் 6 நபர்கள் சாராய ஆலையை நடத்தி வருகின்றனர்! அவர்கள் அனைவரும் 1 சதவிகிதம் கல்விக்கு செலவிட்டு விட்டு மற்றவைகளை இலவசத்திற்கு கொண்டு செல்லக் கூடியவர்கள்!
ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கொண்டு தாய்மொழியையும் பேசிக் கொண்டு இந்தியையும் பேசி வருகின்றனர்., ஆனால் தமிழகத்தில் ஒருவர் தமிழையும் நன்றாகப் படிக்காமல் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் வித்யாசம் தெரியாமல் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு அறைகுறை அரசியல் செய்து வருகின்றார்
கனிமொழிக்கு இந்தி நன்கு தெரியும், ஏனென்றால் பிரதமராக வி.பி சிங் தமிழகம் வந்த போது, இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு அவர் பேச்சை மொழி பெயர்த்தவர் கனிமொழி தான், ஆனால் கனிமொழி எம்.பி ஆனதற்கு பிறகு இந்தி தெரியாது என்றார்.
தமிழகத்தில் காணாமல் போன நடிகை, நடிகர்கள் எல்லாம் பா.ஜ.க.,வில் தான் உள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். . காணாமல் போன நடிகர் நடிகைகள் யார், எல்லாமே தான் தற்போது உள்ளனரே!, குஷ்பு அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவமானப்படுத்தப்பட்டு பின்னர் பா.ஜ.க வில் இணைந்தது குறித்து அவரே கூறியுள்ளார்!
தொல்.திருமாவளவன் ஒரு விளம்பர பிரியர். தமிழக இந்துக்கள் குறிப்பாக தமிழக பெண்களை இவர்கள் அவமானப்படுத்தும் போது, இந்த வேல் யாத்திரை முக்கியம். வேல் யாத்திரையில், எம்.ஜி.ஆர் படம் பொறிக்கப்படுகின்றதே என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஒரு முருகபக்தர் என்பதற்காக தான் அவரை முக்கியத்துவப் படுத்துகின்றோம். அதுதவிர வேறு அரசியல் நோக்கம் இல்லை!… என்றார் அண்ணாமலை.