ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அண்ணா உருவம் பொறிக்கப்படாத கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியுடன் வந்தார் தினகரன். முன்னதாக, எம்.ஜி.ஆர் சமாதி, ஜெயலலிதா சமாதிகளுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய டி.டி.வி.தினகரன் பின்னர் ஆதரவாளர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் இன்றே அதிமுக.,வைச் சேர்ந்த மதுசூதனன், திமுகவின் வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர்.
ஆர்.கே.நகரில் வரும் டிச.21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.




