ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்..?

சற்றுமுன் சினி நியூஸ்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகரில் அவர் சுயேட்சையாக போட்டியிடுவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் வரும் திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும்  வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் வைரலாக ஷேர் செய்யப் பட்டு வருகிறது.

நடிகர் விஷாலுக்கு, நடிகர் கமலின் அரசியல் இயக்க பின்னணியின் ஆதரவு உள்ளதாகவும், விஷாலின் மூலம், தன் அரசியல் செல்வாக்கை கமல் சோதித்துப் பார்க்க முயற்சி செய்வார் என்றும் திரைத்துறையில் பரவலாகப் பேசப் படுகிறது. நடிகர் விஜயின் அரசியல் ஆசைக்கும் அரசியல் பிரவேசத்துக்கும் போட்டியாக, தற்போது விஷாலும் ஓரிரு இடங்களில் அரசியல் பேசி வருகிறார். அதனால் விஷால் குறித்த வதந்திகளும் கூடவே இறக்கை கட்டிப் பறக்கின்றது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.