ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் கூறினார்.
ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் தெரிவித்தார். முன்னதாக ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் மதுசூதனன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு டிடிவி தினகரன் அதிக ஆட்களை அழைத்து வந்ததாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
இன்று காலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் மதுசூதனன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறிய மதுசூதனன்,
ஆர்.கே.நகரில் வெற்றி பெற டிடிவி தினகரன் கனவு காண்கிறார்
என்று கூறினார்.
இதனிடையே, தினகரன் அதிக ஆட்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
என்றும், தேர்தல் ஆணைய தீர்ப்புக்கு எதிராக தினகரன் அதிமுக கொடியை பயன்படுத்தியுள்ளார்; அதிமுக கொடி எங்களுக்குத்தான் என ஆணையம் உத்தரவிட்ட பிறகு தினகரன் பயன்படுத்தியுள்ளார்
என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிச.21ஆம் தேதி நடைபெற உள்ளது.




