‘மூக்குத்தி அம்மன்’ படத் தயாரிப்பாளரை TTD ஆலோசனைக் கமிட்டியில் இருந்து நீக்க கோரிக்கை!

mukkuthi amman
mukkuthi amman

மூக்குத்தி அம்மன் படத்தயாரிப்பாளர் “ஐசரி கணேசன்” என்பவரை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:

திருப்பதி பெருமாள் மலை குறித்தும்,இந்து மத கடவுள்பக்தி குறித்து அவதூறாக படமெடுத்த “மூக்குத்தி அம்மன்” திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும் படக்குழுவினர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் கட்சி கோரிக்கை!!

கோடான கோடி இந்துக்களின் குலதெய்வமாக,
இஷ்டதெய்வமாக விளங்கி கொண்டிருப்பது திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பழனி மலை முருகன்.

லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து முடி காணிக்கை செலுத்தி, தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டு வருவது காலம் காலமாக நடந்து கொண்டு வரும் நடைமுறை.

சென்னையிலிருந்து செல்லும் திருப்பதி திருக்குடை தரிசனம் செய்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா’ “கோவிந்தா” என்ற முழக்கம் செய்வது பக்தி உணர்வினால் தான்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

திருப்பதியில் கொடுக்கக் கூடிய லட்டு பிரசாதத்தால் அல்ல.
ஆழ்வார்கள் பாடினார்கள் என்றால் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தியின் பொருட்டு தான் பாசுரங்கள் பாடினார்கள்.

திரைப்படத்துறையில்” கலை சுதந்திரம்”
கருத்து சுதந்திரம் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட இந்துமத பிரிவினரை மட்டும் கொச்சைப்படுத்தியும் அவர்களின் பக்தியை கிண்டல் செய்தல், திருத்தலங்கள் மீதான நம்பிக்கையை சிதைக்கக் கூடிய வேலைகளில் நடிகர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் இந்து மத நம்பிக்கைகளை மட்டும் கொச்சைப்படுத்துகிறது.

இந்துமத சாமியார்களும் வில்லன்கள் போலவும் காட்சிப்படுத்துகிறது. இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தயாரித்தவர் திரு ஐசரி கணேசன் என்பவர். இவர் திருப்பதிதேவஸ்தானம் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

திருப்பதி பெருமாள் மீது நம்பிக்கை இல்லாது லட்டு கொடுப்பதால் கூட்டம் வருகிறது பழனி பஞ்சாமிர்தம் கொடுப்பதால் கூட்டம் வருகிறது என்று கொச்சைப்படுத்த கூடிய ஐசரி கணேசன் என்பவரை ஆலோசனை குழு உறுப்பினராக வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

இஸ்லாம் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை கடவுள் வேடம் பூண்டு, அந்த மத கடவுள்கள் பேசுவதுபோல, அல்லது மசூதி சர்ச்சுகளுக்கு கூட்டம் வருகிறது என்றால், அங்கெல்லாம் எப்படி கூட்டம் வருகிறார்கள். அங்கே மதுபானங்கள் கொடுக்கிறார்கள் அதனால் கூட்டம் வருகிறது. இது குறித்த எந்த காட்சி வடிவமைப்பும் இல்லை.

சமீபத்தில் கேரளாவில் பிடிபட்ட பாதிரியார் கணக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பிடிபட்டது ஐசரி கணேசன் கண்ணுக்கு தெரியவில்லையோ என்னவோ!

இந்து மத நம்பிக்கைகளை உடைத்து திருத்தலங்கள் மீதான நம்பிக்கைகளை சிதைப்பது, பக்தியை கேலி கிண்டல் செய்து கொச்சைப்படுத்துவது போன்றவையெல்லாம் கலைத்துறையில் திட்டமிட்ட செயல் வடிவமாகவே நடைபெறுகிறது என்று பார்க்கிறோம்.

ஆகவே திருப்பதி பெருமாள் கோவில் குறித்தும் திருப்பதி பெருமாளை வணங்க கூடிய பக்தர்கள் பக்தியை கொச்சைப்படுத்தி படமெடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேசன் என்பவரை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட புகார் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் முன் வைக்கிறோம்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

சர்ச்சைக்குரிய இந்துமத கடவுள் பக்தி காட்சிகள் நீக்கப்பட வேண்டும் இல்லையெனில் தசாவதாரம் பிரச்சனை வந்தபோது முஸ்லீம் இயக்கங்கள் என்ன நிலையை கையாண்டார்களோ அதே சூழ்நிலை எதிர்காலத்தில் திரைத் துறையினருக்கு
இந்துக்களால் ஏற்படக்கூடிய சூழ்நிலையை இதுபோன்ற படக்குழுவினரே உருவாக்குகிறார்கள்.

தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ஆர் ஜே பாலாஜி நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் இந்துக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையெனில் பக்தர்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க கூடிய சூழ்நிலை உருவாக்கிட வேண்டாமென்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் எச்சரிக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories