December 5, 2025, 8:46 PM
26.7 C
Chennai

பல்கலை., பாடத்தில் மாவோயிஸ்ட்கள் நுழைந்தது எப்படி?: தீவிர விசாரணை தேவை!

prof-srinivasan-karur-press-meet
prof-srinivasan-karur-press-meet

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடப் புத்தகத்தில் மாவோயிஸ்ட்கள் குறித்து பாடம் எப்படி வந்தது பிரதமர் மோடியின் ஆட்சியில் மாவோயிஸ்ட்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் இப்படியா ? மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூரில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினா.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…

தீபாவளிக்காக வேல் யாத்திரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2ஆம் கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 24ம் தேதி வேல் யாத்திரை கரூர் வர இருக்கிறது.

அரியலூர், பெரம்பலூர் வழியாக தஞ்சை செல்ல இருக்கிறோம். வேல் யாத்திரைக்காக பல இடங்களில் பொதுமக்களிடம் வரவேற்பு இருக்கிறது. கரூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் Go back modi என்று திமுக எழுதுவது தொடர்கிறது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பாஜகவினர் அவற்றை அழிப்போம்.

மத்திய அமைச்சர் அமீத்ஷா வரும் 21ம் தேதி சென்னை வருகிறார். அரசு நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தமிழ்நாடு தேர்தல் களம் அமீத்ஷா வருகைக்கு முன், பின் என்று மாற இருக்கிறது.

ரஜினி கட்சி ஆரம்பிப்பது அவர் இஷ்டம். பாஜக கொள்கைக்கு நெருக்கமானவர், அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். மு.க. அழகிரி மன வருத்தத்தில் இருக்கிறார். திமுகவில் கனிமொழியை ஏற்றுக் கொள்ளவில்லை. உதயநிதியிடம் வாழ்த்து பெற்றதாக மூத்த தலைவர் பதிவிடுகின்றனர். இது வேதனை அளிக்கிறது. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி என்று குடும்ப அரசியல் செய்கிறார்கள். முக அழகிரி கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம்.

பாஜக தேர்தல் இலக்கு திமுக ஆட்சிக்கு வரக் கூடாது. அவற்றை வராமல் தடுப்பது ஒன்றே இலக்கு. தொடர்ந்து பிரிவினை வாதங்களை பரப்பி வருகின்றனர்.

மோடி ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாவோயிஸ்ட்களை பற்றி பாடம் இடம் பெறுகிறது. மாநில அரசு விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை, அரசு இயந்திரங்களை டார்கெட் வைத்து மாவோயிஸ்டுகள் செயல்படுகிறார்கள். அவர்களை பற்றி திட்டமிட்டு பரப்பப் படுகிறது. பெரியார் யுனெஸ்கோவில் விருது பெற்றார் என்ற அபத்தமான விசயங்களை பாட புத்தகங்களில் வைக்கிறார்கள்.

ஜெயலலிதா இறந்ததிலிருந்து, ஸ்டாலினுக்கு மோடி ஃபோபியா வியாதி இருக்கிறது. 21ம் தேதிக்குள் go back modi என்பதை அழிக்கவில்லை என்றால் 22ம் தேதி நாங்கள் அழிப்போம்.

காங்கிரஸ் கட்சி சுமையாகி விட்டது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் ராம.ஸ்ரீனிவாசன்!

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கரூர் பா.ஜ.க மாவட்ட தலைவர் சிவசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மோகன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories