காரில் செல்வதை காவல்துறை தடுத்தால்… அரசு பஸ்களில் திருச்செந்தூர் செல்வோம்!

சற்றுமுன் மதுரை
raja-bjp-madurai
raja-bjp-madurai

திருமங்கலத்தில் வேல் யாத்திரை செல்ல இருந்த பிஜேபியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, காரில் இருந்த பிஜேபி கொடியை அகற்றக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது! தடுத்து நிறுத்தினாலும் அரசுப் பேருந்தில் பயணத்தைத் தொடர்வோம் என்று, பாஜக பிரச்சார பிரிவு மாநில செயலாளர் ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ பகுதியிலிருந்து பிஜேபியினர் ஒருங்கிணைந்து வேல் யாத்திரை செல்ல இருந்த நிலையில் பிஜேபி.,யினரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்வதாக அறிவித்தன் பேரில் வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அரசுப் பேருந்தில் கூட சென்று, முருகனை தரிசிப்போம் என பிரச்சார மாநில செயலாளர் ராஜா செய்தியாளரிடம் கூறினார்

பாஜகவின் வேல் யாத்திரை நிறைவு நாளான நாளை திருச்செந்தூரில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து பாஜக பிரச்சார பிரிவு குழு துணைத் தலைவர் குமரி கிருஷ்ணன் தலைமையில் மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ பகுதியில் இருந்து புறப்பட தயாராக இருந்தனர் .

அவர்களை வரவேற்க தயாராக இருந்த மாநில செயலாளரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் பிஜேபியினர் வந்த காரில் இருந்த கொடியை திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி அகற்ற கூறியதை தொடர்ந்து கட்சியினர் பிஜேபி கொடியினை அகற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது

இது குறித்து பாஜக மாநில பிரச்சார பிரிவு மாநில செயலாளர் ராஜா கூறியதாவது, திருச்செந்தூரில் நடைபெறக்கூடிய வேல் யாத்திரைக்கு செல்வதற்காக 200 வாகனங்களில் தென் தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவினர் ஒன்று கூடியிருந்தோம், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சாரம் தடைபட்டுள்ளது. எங்களது மாநில பிரச்சார குழு தலைவர் ஆணைக்கிணங்க பிரச்சாரத்தை வாகனங்களில் செல்லாமல் அரசு பேருந்து செல்ல திட்டமிட்டுள்ளோம் எங்களுடைய பிரச்சாரம் தொடரும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.