
புதுக்கோட்டை அருகேயுள்ள வேப்பங்குடிகிராமத்தில் நிவர் மற்றும் புரெவி புயலின் போது தொடர்ந்து மழை பெய்ததால் நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளது !!
புதுக்கோட்டை அருகேயுள்ள வேப்பங்குடிகிராமத்தில் நிவர் மற்றும் புரெவி புயலின் போது தொடர்ந்து மழை பெய்ததால் பல்வேறுபகுதிகளில் மழைநீர் தேங்கிருந்தது. இதனால் பாசன நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் களை தண்ணீர் சூழ்ந்துவிட்டது.
பொற்பனைக்கோட்டைசேர்ந்த பழனியப்பன் ,கண்ணனுக்கு சொந்தமான வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 3 ஏக்கர் நெற் பயிர்கள்களை தண்ணீர் சூழ்ந்துவிட்டது. இதனால் நெற்கதிர்கள் அழுகி சேதமடைந்துள்ளது. மேலும் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வடிந்தாலும், நெற்பயிர்கள் பிழைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
உடனடியாக சம்மந்தப்பட்டமாவட்ட நிர்வாகத்தினர் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட்டு உதவிட வேண்டுமென விவசாயிகள் கேட்டு கொள்கின்றனர் அருகில் உள்ள கண்மாய்களில் மழைநீர் நிரம்பி உள்ளன
- செய்தி: டீலக்ஸ் சேகர்