
மதுரை: மதுரையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் சக பயணி போல் நடித்து 20 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் சோழன் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவர் மதுரை அருகே ஓடப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். பின்னர் , சொந்த ஊருக்கு செல்ல மாட்டுத்தாவணி சென்று மாட்டுத்தாவணியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
அவர் அமர்ந்திருந்த இருக்கையின் மேல் பகுதியில் பொருள் வைக்கும் இடத்தில் தனது பேக்கை வைத்திருந்தார். பஸ்
மேலூர் அருகே சென்றபோது தான், தாம் வைத்திருந்த பேக்கை காணவில்லை என்று தெரிந்தது.
மேலும் அதில், வைத்திருந்த 20 பவுன் நகையை மர்ம ஆசாமி திருடிச் சென்றதும் தெரியவந்தது.
ஓடும் பஸ்சில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருட்டு தொடர்பாக முருகானந்தம் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பயணியை தேடி வருகின்றனர்.