பிப்ரவரி 25, 2021, 1:53 மணி வியாழக்கிழமை
More

  வெளி நாட்டிலிருந்து வந்த சல்மான்கான் சகோதரர்கள்! போலீஸார் வழக்குப் பதிவு!

  Home சற்றுமுன் வெளி நாட்டிலிருந்து வந்த சல்மான்கான் சகோதரர்கள்! போலீஸார் வழக்குப் பதிவு!

  வெளி நாட்டிலிருந்து வந்த சல்மான்கான் சகோதரர்கள்! போலீஸார் வழக்குப் பதிவு!

  Salman khan 1
  Salman khan 1

  பாலிவுட் நடிகர் சல்மான்கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். ரசிகர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துகொள்வது சில சமயம் அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் இது பரபரப்பை ஏற்படுத்தும். தற்போது சல்மான் கான் சகோதரர்கள் மீது போலீசாஎர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.

  சல்மான்கான் சகோதரர்கள் சோஹில் கான், அர்பாஸ் கான். சோஹிலின் மகன் நிர்வான் கான். இவர்கள் மூவரும் வெளிநாட்டிலிருந்து மும்பை வந்தனர். பிறகு கொரோனா விதிமுறைகள்படி ஓட்டல் ஒன்றில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதாக போலியாக தகவல் கொடுத்து விட்டு அவர்கள் மூவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் மும்பை கார்ப்பரேஷன் சுகாதார அதிகாரிகள் 3 பேர் மீதும் புகார் தெரிவித்தனர்

  அதன்பேரில் அவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. கொரோனா காலகட்டதில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி அமலில் உள்ள நிலையில் சல்மான் சகோகோதரர்கள் அதை மீறி தங்கள் வீடுகளுக்கு சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  Salmans-bro-1
  Salmans-bro-1

  கொரோனா காலகட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மகராஷ்ட்ரா மாநிலத்தில் அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

  பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், சல்மான் கான் டிரைவர் மற்றும் அவரது பணியாளர்கள் இரண்டு ப