ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறு! உடனிருந்த இளைஞனைக் கொன்ற இளைஞன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murder-2-1
murder-2-1

ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள நொச்சிபாளையம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் அந்த ஆண் சடலம், அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும், இறந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரதாஸ் என்றும் அவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரவீந்திர தாஸின் செல்போன் போலீசாரின் பிடியில் சிக்கியது. அதில், அவர் கடைசியாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த சுபாஷ்(20) என்ற இளைஞரிடம் பேசியதும் ரவீந்திரதாஸ் உடன் சுபாஷ் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சுபாஷை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த ஒரு ஆண்டாக ரவீந்திரதாஸ் உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் நொச்சிபாளையம் பகுதியில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருந்த போது ஏற்பட்ட தகராறில் ரவீந்திரதாஸ் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் சுபாஷ் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.