பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் லோகோ! மாற்ற ஒப்புதல் அளித்த மிந்திரா நிறுவனம்!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
myntra3-1
myntra3-1

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக மிந்திரா நிறுவனத்தின் லோகோ இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தனது லோகோவை மாற்ற நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் அமேசான், பிளிப்கார்டை போலவே மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமாக மிந்திரா நிறுவனம் உள்ளது. ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மிந்திரா நிறுவனத்தில் ஆன்லைன் முன்னெப்போதும் இல்லாத வகையில் குவியத்தொடங்கியது.

நிமிடத்துக்கு சுமார் 18 ஆயிரம் ஆர்டர்கள் வரை பதிவானதாக தெரிவித்த அந்த நிறுவனம், End of season – ல் மட்டும் சுமார் 1.35 கோடி பேர் வெப்சைட்டில் ஷாப்பிங் செய்ய வந்ததாகவும், 40 லட்சம் பேர் ஆர்டர் செய்ததாகவும் மிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.

myntra-1
myntra-1

இந்நிலையில் மும்பையில் செயல்பட்டு வரும் அவஸ்டா பவுண்டேசனை சேர்ந்த நாஸ் பட்டேல் என்பவர் மும்பை சைபர் குற்றப்பரிவில் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் மிந்திரா நிறுவனத்தின் லோகோ பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ததில் லோகோ ஆபாசமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் விளக்கம் அளிக்க கூறி மித்ரா நிறுவனத்திடம் காவல்துறை குற்றப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் நேரில் வந்து விளக்கம் அளித்துள்ள மிந்திரா நிர்வாகிகள், ஒரு மாதத்திற்குள் தங்கள் லோகோவை மாற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தை லோகோவை மட்டுமல்லாது செயலி மற்றும் வெப்சைட் ஆகியவற்றின் லோகோவையும் மாற்ற முடிவு செய்துள்ளது.

myntra-1
myntra-1

மேலும், பேக்கேஜிங் மெட்டீரியல்களிலும் புதிய லோகோவை பிரிண்ட் செய்யுமாறு நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.