ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராக மீண்டும் சம்மன்

சற்றுமுன் தமிழகம்

சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஷீலா பாலகிருஷ்ணனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, அவர் தொடர்புடைய பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். இதில், முன்னாள் தலைமைச் செயலரும், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த வருடம் டிச.,20ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், வரும் ஜன.11 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மீண்டும் அவருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.