நடிக்க ஆள் தேடும் பார்த்திபன்! இப்படி கேட்டா சர்ச்சை தான் தெரியாதா உங்களுக்கு?

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
actor parthiban
actor parthiban

கோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து இருப்பார். இவர் தனி ஒரு ஆளாக நடித்து இயக்கிய திரைப்படம் ஒத்த செருப்பு.

இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இத்தகைய சூழலில், அவர் இரவின் நிழல் எனும் புதிய திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஒரே ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட ‌திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த படம் ஆசியாவிலேயே கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்த்திபன் ஸ்க்ரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு முடித்துவிட்டார்.

இத்தகைய சூழலில், தனது டுவிட்டர் பக்கத்தில் மூலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் 16 முதல் 18 வயதிற்குள் நடிகைகள் இருக்க வேண்டும் என்றும் ,தென்னிந்திய முக ஜாடை உடன் நல்ல நிறத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருப்பது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

வெள்ளையாக இருக்கும் ஹீரோயின் தான் வேண்டுமா? மாநிறமாக நல்ல நடிக்க கூடிய திறமைமிக்க நடிகைகள் வேண்டாமா என்று நெட்டிசன்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.