பிப்ரவரி 25, 2021, 4:28 காலை வியாழக்கிழமை
More

  எதிர்பாராத மாற்றம் தந்த என்னை அறிந்தால்.. ‘தல’ க்கு நன்றி சொன்ன அருண் விஜய்!

  Home சற்றுமுன் எதிர்பாராத மாற்றம் தந்த என்னை அறிந்தால்.. 'தல' க்கு நன்றி சொன்ன அருண் விஜய்!

  எதிர்பாராத மாற்றம் தந்த என்னை அறிந்தால்.. ‘தல’ க்கு நன்றி சொன்ன அருண் விஜய்!

  arunvijay
  arunvijay

  மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும், ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்தார் அருண்விஜய்.

  ஆனால் சமீப காலமாக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதற்கு காரணம் தல அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம்தான்.

  ஏனென்றால் அதில் அருண் விஜய், வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிறிய பட்ஜெட்டில் ஹீரோவாக சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்தார்.

  ajith 1 1
  ajith 1 1

  அனைத்துமே லாபங்களை கொடுத்து வந்ததால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறிவிட்டார் அருண் விஜய்.

  ஆகையால் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளியாகி ஆறு வருடம் நிறைவடைந்துள்ளதால், ‘என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்த படம் ‘ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் விஜய் தல அஜித்துக்கு, இயக்குனர் கெளதம் மேனனுக்கும் நன்றி கூறியுள்ளார்.

  இந்த பதிவானது தற்போது தல ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை தல ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

  இப்படத்தில் அருண் விஜய்யின் விக்டர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லி தல அஜித் இயக்குனர் கெளதம் மேனனிடம் வேண்டுகோள் வைத்தாராம். மேலும் அருண் விஜய்