திருப்பரங்குன்றத்தில் முன்னோர் வழிபாடு!

Published:

thai-amavasai-thiruparankundram
thai-amavasai-thiruparankundram

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில்  தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சரவணப்பொய்கையில் தை மாத அமாவாசை பிதுர் தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஏராளமானோர் பங்கேற்று, இறையடி சேர்ந்த தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். சரவணப் பொய்கை வளாகத்தில் ஏராளமானவர்கள் கூடியதால் அந்த இடம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Related articles

Recent articles

spot_img