பெண் ஒருவர் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அவரை படுக்கைக்கு அழைத்த வீட்டு உரிமையாளர் அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
35 வயது பெண் ஒருவர் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், அவர் கூறியிருப்பது: 28 வயதான பிரதீப்குமார் என்பவரின் வீட்டில் நான் வாடகைக்கு வசித்து வருகிறேன், ஆனால் அவர் புழல், காவாங்கரை பகுதியில் வசித்து வருகிறார். அவர், வீட்டில் யாரும் இல்லாத போது என் வீட்டிற்கு வந்து எனது படுக்கையில் படுத்துக் கொண்டு, கையை பிடித்து இழுத்து அத்துமீறுகிறார்.
மேலும் என்னால் 4 மாத வாடகை கொடுக்க முடியாமல் பாக்கி உள்ளது, இதை சாதாகமாக பயன்படுத்தி கொண்ட வீட்டு உரிமையாளர் வாடகை கொடுக்க முடியாவிட்டால் எனக்கு ஒத்துழைப்பு கொடு என தொந்தரவு செய்து மன ரீதியாக பல்வேறு துன்பங்களை கொடுத்து வருகிறார். அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு உடனே இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர்புரம் போலீசார், அந்த பெண் கூறிய விலாசத்துக்கு சென்று பின்னர், அந்த பெண்ணின் வீட்டு படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் பிரதீப்குமாரை பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கொரோனா காலத்தில் தனியாக தனது வாழ்கையை நடத்தும் பெண்கள் வேலை இல்லாமல் போனதால் இது போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.