கருணாநிதி சிலைத் திறப்புக்காக… மதுரையில் ஸ்டாலின்! எதிர்ப்பு தெரிவித்து பாஜக., ஊர்வலம்!

Published:

madurai-bjp-protest-in-simmakkal
madurai-bjp-protest-in-simmakkal

மதுரை சிம்மக்கல்லில் கருணாநிதி சிலை வைக்கக் கூடாது எனக் கோரி, பாஜகவினர் பாஜக நிர்வாகி சீனிவாசன் தலைமையில் மதுரை மீனாட்சி பஜாரிலிருந்து ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை போலீஸார் மதுரை சிம்மக்கல் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று மதியம் திறந்து வைக்கிறார். மாவட்டம் தோறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் கட்சி நிகழ்ச்சிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.

மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டத்துக்கான இந்த நிகழ்ச்சி மதுரை ஒத்தக்கடையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நடக்கிறது. இதில் ஆறு சட்டப் பேரவை தொகுதிகளைச் சேர்ந்தோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி , மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வெண்கலச் சிலை மதுரை சிம்மக்கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை ஸ்டாலின் இன்று பிற்பகலில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இன்று இரவு ஸ்டாலின் மதுரையில் தங்குகிறார். நாளை காலை 8 மணிக்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் விலக்கில் நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

Related articles

Recent articles

spot_img