சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் திரிஷ்யம் 2! இணைய வாசிகள் விமர்சனம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
thirshyam-1
thirshyam-1

மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் 2 படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியானது. நேற்று இரவு முதலே இந்த படத்தை பார்க்க தொடங்கிய ரசிகர்கள் இந்த படம் குறித்த தங்களது கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

த்ரிஷ்யம் 2 படம் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் விறுவிறுப்பாக செல்வதாகவும் முதல் பாகத்தை விட இருமடங்கு சஸ்பென்ஸ், திருப்பங்களும் இருப்பதாகவும் டுவிட்டார் பயனாளிகள் குறிப்பிட்டுள்ளனர்.

thrishyam2
thrishyam2

குறிப்பாக இண்டர்வெல் டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது என்றும் கடைசி 45 நிமிட கிளைமேக்ஸ் இதுவரை எந்த இந்திய படத்திலும் இருக்காது என்றும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்

மோகன்லால் மற்றும் மீனா நடிப்பு மிகவும் அபாரம் என்றும் முதல் பாகத்தை விட இருமடங்கு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.