நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி இந்திய தொழிற் கூட்டமைப்பினர் கூறுகையில், தற்போதுள்ள வருமான உச்சவரம்பு அளவான 2½ லட்சம், 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படலாம் என்றும் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயராது என்றும் தெரிவித்துள்ளனர். 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



