முதல்வர் பழனிசாமிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் எழுதியுள்ள கடிதத்தில் ஆர்.கே. நகரில் அதிமுக தோல்வியடைந்தது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக் காதது ஏன்? என்று கேள்வி விடுத்துள்ளார். தனது தோல்விக்க யார் காரணம். தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் தான் வெற்றி பெற்றிருந் தால் அது கழகத்தின் வெற்றியாக இருக்கும். தான் தோற்றது கழகத்தின் தோல்விதானே? என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில் தரவில்லை எனில் தனது முடிவு தன்னிச்சையாக இருக்கும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். கடிதத்தில் முதல்வரிடம் மதுசூதனன் 14 கேள்விகள் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவைத் தலைவர் மதுசூதனனின் இந்த திடீர் கடிதத்தால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள தாக மதுசூதனன் ஆதரவாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.



