சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலு குறைந்து இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வலுவிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவக் காற்றில் வேக மாறுபாடு காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை'' என்றும் தெரிவித்துள்ளனர்.
Popular Categories



