ஆபாச நடிகையின் புகைப்படம்.. அனுமதியின்றி பயன்படுத்தியதால் v படம் வெளியாவதில் தாமதம்!

Published:

nani - 2026

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழிலும் ஆரம்பத்தில் வெப்பம், ஆஹா கல்யாணம் போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நானி நடிப்பில் அமேசான் தளத்தில் அவருடைய 25வது படம் வெளியானது. அதற்கு V என பெயர் வைத்தனர். மேலும் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இசை அமைப்பாளர் தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் இசையை திருடி இசையமைத்ததாக அப்போதே சர்ச்சைகள் கிளம்பியது.

அதனைத் தொடர்ந்து படம் வெளியாகி நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

nani v - 2026

வி படத்தில் ஆபாசப்பட நடிகையின் புகைப்படம் ஒன்று அவருடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்களாம். இதன் காரணமாக அந்த நடிகை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அமேசான் தளத்திலிருந்து உடனடியாக வி படத்தை நீக்கிவிட்டனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

மேலும் புகைப்படத்தை பிளர் செய்து பயன்படுத்தக் கூடாது எனவும் முழுவதுமாக அந்த காட்சியை நீக்கி விட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அமேசான் தளத்தில் V படம் வெளியாகுமாம்.

shaksi malik 1 - 2026

Related articles

Recent articles

spot_img