murder-1
murder-1

தூத்துக்குடி மாவட்டத்தில் தம்பியின் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அண்ணன்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிந்தலக்கட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமலட்சுமி வயது 42 இவரது கணவர் சின்னதுரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இதனால் குடும்ப வறுமையின் காரணமாக ராமலட்சுமி தனியாக கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.அவர் கள்ளக்காதலனுடன் அவ்வப்போது வெளியில் சென்று வருவது என்று வாடிக்கையாகவே வைத்திருந்தார்

எளிதில் கர்ப்பம் அடைந்த அவர் கடந்த மாதம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் பிறந்த குழந்தை வேறு ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சின்னத்துரையின் அண்ணனான கொம்பன் என்கின்ற சேகர் ராஜலட்சுமி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.

மேலும் கள்ளக்காதல் தொடர்பை கைவிட அவருக்கு அறிவித்துள்ளார். இதனை ஏற்காத ராஜலக்ஷ்மி தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்துள்ளார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய அண்ணன் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்த ராஜலட்சுமி அரிவாளால் கொடூரமான வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதனையடுத்து சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர் சம்பவம் நடந்த பகுதியை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுமேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending