திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா!

சற்றுமுன் தமிழகம்
Kanimozhi A
Kanimozhi A

திமுக எம்பியும், அக்கட்சி மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கனிமொழி, சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கனிமொழி செல்ல உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதனால் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மக்களும், தொண்டர்களும், உடன்பிறப்புகளும் பீதி அடைந்துள்ளனர்.

Posts by Suprasanna Mahadevan: