பாம்பு செட்டில் பதுக்கி வைத்த 800கிலோ குட்கா பறிமுதல்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
kutka
kutka

கும்மிடிப்பூண்டி அருகே பம்பு செட்டில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ தடைசெய்யபட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் குருத்தானமேடு பகுதியில் உள்ள விவசாய கிணற்று பம்புசெட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அழகேசன் தலைமையில் போலீசார், நேற்றிரவு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, பம்புசெட் குடோனில் மூட்டை மூட்டையாக, அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கிருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கும்மிடிபூண்டி பஜாரில் கடை நடத்தி வரும் பிரதாப்சிங் என்பவர், குட்காவை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து, பிரதாப் சிங்கை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.