ஆர்டர் செய்த தோசை வரலை.. சப்ளயருக்கு வெட்டு!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
hottel 1
hottel 1

ஆர்டர் செய்த தோசையை மற்றவருக்கு வைத்ததால் ஆத்திரம் அடைந்த நபர் ஹோட்டல் சப்ளையர் காதை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அடுத்துள்ள வெளிப்பாளையத்தில் மோகன் என்பவர் தேவி திரையரங்கு அருகே ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தேவி தியேட்டரில் திரையிடப்படும் கர்ணன் படத்தை பார்க்க வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒன்றை அருண்குமார் மற்றும் சப்பை சிவா ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மோகனின் உணவகத்திற்கு இருவரும் சாப்பிட வந்த அப்போது அருண்குமார் தோசை ஆர்டர் செய்ததாகவும், அந்த தோசையை சப்ளையர் வேறு ஒரு டேபிளில் சாப்பிட்டவர்களுக்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஒன்றை அருண்குமாரும், சப்பை சிவாவும் கடை ஊழியர்களிடம் சண்டையிட தொடங்கினர். இதனிடையே வாக்குவாதம் முற்ற ஒன்றை என்கிற அருண்குமார் மற்றும் சப்பை என்கிற சிவா ஆகிய இருவரும் கத்தியை எடுத்து சப்ளையர் பாஸ்கரனின் காதில் வெட்டியுள்ளனர்.

hottel
hottel

இதில், காயமடைந்த பாஸ்கரனை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வெளிப்பாளையம் போலீசார் ஒன்றை அருண்குமார் மற்றும் சப்ளை சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

நாகையில் ஆர்டர் செய்த தோசையை மற்றவருக்கு கொடுத்த ஹோட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.