raiza scaled
raiza scaled

தோல் மருத்துவர் செய்த தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கிவிட்டதாக நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘ நான் நேற்று தோல் மருத்துவர் டாக்டர் பைரவியை சிறிய முக சிகிச்சைக்காக சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக் கட்டாயாமாக அளித்தார். அதனால் தற்போது எனது முகம் இப்படி மாறியிருக்கிறது.

raiza
raiza

இதுதொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார். அவரது உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறியதாக அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

raiza2
raiza2

அத்துடன் அவர் வீங்கிய முகப் புகைப்படத்தையும் அந்தப்பதிவில் இணைத்துள்ளார். அதில் ரைசாவின் இடது பக்க கன்னம் வீங்கியிருக்கிறது. குறிப்பாக கண் அருகில் கொப்பளம் போல் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending