டிக் டாக் மூலம் பழகி சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
woman - 2026

சென்னையில் உள்ள அடையார் பகுதியை சார்ந்தவன் விக்னேஷ் (வயது 24). இவன் அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் டிஜிட்டல் டிசைனராக பணியாற்றி வருகிறான்.

இவனுக்கு டிக்-டாக் செயலி மத்திய அரசால் தடை செய்யப்படுவதற்கு முன்னதாக எர்ணாவூரை சார்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர் அங்குள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், விக்னேஷ் தனது புகைப்படங்களை எடிட் செய்து பதிவு செய்வது, பாடலுக்கு நடனமாடி வித்தை காண்பித்து சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், மகளின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் மாணவியை கண்டிக்கவே, கடந்த 16 ஆம் தேதி தோழியை பார்த்துவிட்டு வருவதாக தெரிவித்த சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை, தோழியையும் பார்க்க செல்லவில்லை.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையில் சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய விக்னேஷ், அவரை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி காதலனை நம்பி சென்ற நிலையில், அடையாருக்கு சிறுமியை அழைத்து சென்ற கொடூரன் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் அம்பலமானது.

இதனால் விக்னேஷின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.