10ஆம் வகுப்பு மாணவியை மகனுக்கு மணமுடித்த தாய்! போக்சோவில் கைது!

சற்றுமுன் தமிழகம்
child marriage
child marriage

ராமநாதபுரத்தில் 14 வயது சிறுமியை மகனுக்கு திருமணம் செய்து வைத்த தாய் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்தவர் விக்ரமாதித்தன் இவருடைய 14 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 27 இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி பள்ளி விடுதியில் தங்கியிருந்த சிறுமியை மணிகண்டனின் தாயார் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் அவரை ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்தனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தினர் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டனின் தாயார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த உறவினர்களான கருப்பையா மற்றும் லட்சுமணன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சிறுமி திருமணத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.