புதுக்கோட்டையில் ரெட்கிராஸ் தினம்!

சற்றுமுன் திருச்சி
pudukkottai redcross
pudukkottai redcross

புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் சங்கம், ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி யூத் ரெட்கிராஸ், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி யூத் ரெட்கிராஸ் இணைந்து, புதிய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ஜெ.ராஜா முகமது, இணைச்செயலாளர் சா.விஸ்வநாதன், மாவட்ட யூத் ரெட்கிராஸ் அமைப்பாளர் பேரா.தயாநிதி, அரசு மகளிர் கல்லூரி யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பேரா .மாலதி மற்றும் யூத் ரெட்கிராஸ் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உலக ரெட்கிராஸ் தினம். ரெட்கிராஸ் சங்கம் என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜீன் ஹென்றி டூனாண்ட் பிறந்த நாள் இன்று. போரில் காயமுற்றவர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், தற்போது எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் அங்கெல்லாம் ஓடிச்சென்று உதவக்கூடிய சங்கமாக உள்ளது. 192 நாடுகளில் இச்சங்கம் உள்ளது.

  • டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.