தமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்!

Published:

radhakrishnan
radhakrishnan

சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் உள்ள 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டதின் மூலம் சிகிச்சை பெற்று கொள்ளலாம் எனவும், இதுகுறித்து அந்தந்த மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img