கொரோனா: மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இளைஞர்!

hospital - 2026

திருப்பத்தூர் அடுத்த தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே கடந்த 28ம் தேதி 45 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ரயிலின் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த இளைஞரை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், வட மாநில இளைஞர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பாச்சல் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு பிசிஆர் பரிசோதனை செய்து, மருத்துவமனையிலேயே தங்க வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியானது. அதில் வட மாநில இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் கொரோனா வார்டுக்கு மாற்ற சென்றபோது, அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர், இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இதையடுத்து போலீசார் நேற்று மாலை 3 மணி முதல் வட மாநில இளைஞரை தேடி வந்தனர். மேலும், வட மாநில இளைஞர் மண்டலவாடி பகுதி சாலையோரம் நடந்த சென்றதாக தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்டலவாடி பகுதியில் தேடிச்சென்றனர்.

தொடர்ந்து இரவு 9 மணியளவில் சின்னவேப்பம்பட்டு அருகே சென்றபோது, வடமாநில இளைங நடந்து செல்வதை பார்த்து 108 ஆம்புலன்சை சுகாதாரத்துறையினர் நிறுத்தினர். இதைப்பார்த்த அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றார். பின்னர் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் வட மாநில இளைளரை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொரோனா வாட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories