கொரோனா: பேரனுக்காக ட்ரெயினில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட தாத்தா பாட்டி!

இந்தியா சற்றுமுன்
train acc
train acc

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முதிர்ந்த தம்பதிகள் இருவர் தங்கள் மூலமாக தங்கள் பேரனுக்கு கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து கொண்டு இருக்கின்றது..

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மூலமாக தங்கள் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பாதித்தவர்கள் குடும்பத்தினரை விட்டு விலகி வாழ விரும்புகின்றனர்.

சிலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கொரோனா தொற்று கொண்ட முதிர்ந்த தம்பதிகள் இருவர் தங்களுக்கு கொரோனா தொற்றிருப்பதை அறிந்து கொண்ட பின்பு தங்கள் மூலமாக தங்கள் பேரனுக்கு கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக நேற்று அதிகாலை தங்கள் வீட்டை விட்டு இருவரும் வெளியேறி ரயிலுக்கு முன்பதாக குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இவர்களின் தற்கொலை குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.