கொரோனா பாதித்தவர் வெளியில் நடமாடினால் ரூ.2 ஆயிரம் அபராதம்!

chennai corporation office
chennai corporation office

கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள்/ அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும், கொரோனா பாதித்து வெளியே நடமாடுபவர் குறித்து 044 – 25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

இவற்றின் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலத்திற்கு 2 எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து அபராதத் தொகையினையும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை மூடிசீல் வைத்து, அதன் உரிமையாளர்களிடமிருந்து அபராதத் தொகையினையும் வசூலித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியால் 2000க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் (Focus Volunteers) பணியமர்த்தப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வராமல் இருப்பதற்காக இத்தகைய ஏற்பாடுகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

இத்தகைய செயலினால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதனை மீறி வீடுகளை விட்டு வெளியில் வருபவர்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அமலாக்க பிரிவின் மூலம் முதல் தடவையாக ரூ.2000/- அபராதமாக வசூலிக்கவும், இரண்டாவது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் (COVID CARE CENTRE) தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

வீடுகளை விட்டு வெளியே வரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகாமையில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர் 044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories