December 7, 2025, 1:05 AM
25.6 C
Chennai

கடலூர் சம்பவம் மனதை கலங்கடிக்கிறது.. உரிய நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

edapadi cm tn
edapadi

கடலூரில் கொரோனா நோயாளியின் வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை பிடுங்கி, உயிரை பறித்த செவிலியர்களின் செயலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடலூர்‌ மாவட்டம்‌, திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில்‌ வசித்து வந்த கண்ணன்‌ முதலியார்‌ என்பவருடைய மகன்‌ ராஜா அவர்கள்‌ (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத்‌ திணறல்‌ ஏற்பட்டு, கடந்த 8 ஆம்‌ தேதி, கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌ என்றும்‌, நேற்று காலை வரை அவருக்கு கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள்

நேற்று காலை சுமார்‌ 9 மணி அளவில்‌ நோயாளி காலை உணவு அருந்தும்‌ போது அங்கு வந்த பணியில்‌ இருந்த அரசு மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ அவருடைய வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துக்‌ கொண்டு வெளியேற முற்பட்டனர்‌ என்றும்‌, அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவியை (திருமதி கஸ்தூரி) தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துச்‌ சென்று விட்டனர்‌ என்றும்‌, அவரது மனைவி புகார்‌ செய்துள்ளார்‌.

மேலும்‌, போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர்‌ என்றும்‌, இதை சற்றும்‌ எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்‌ என்றும்‌ ஒரு காணொளி சமூக வலைதளங்களில்‌ வலம்‌ வருவதை பார்க்கும்‌ போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.

இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம்‌ கடலூர்‌ அரசு தலைமை மருத்துவனையில்‌ நேற்று காலையில்‌ நடந்துள்ளது. இது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது.

இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது இந்திய குற்றவியல்‌ தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவின்‌ கீழ்‌ உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன்‌, இறந்தவர்‌ குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்‌ என தமிழக அரசினைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories