கணவன் சைக்கோ.. முதலிரவில் மயங்கி விழுந்த மணமகள் புகார்! விசாரணையில் வெளியான உண்மை!

Published:

first night

முதலிரவு அறையில் கணவன் தன்னை கொடுமை படுத்தியதாகவும், அவரை சைக்கோ எனவும் கூறி மணமகள் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் வெற்றிவேல் (30) என்பவருக்கும், அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) என்பவருக்கும் கடந்த 17 ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த அன்று இரவு புதுமண தம்பதியினருக்கு உறவினர்கள் முதல் இரவு ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து முதல் இரவு அறைக்குள் சென்ற கணவன் மனைவி தங்கள் பழைய கால வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர்.

அப்போது, திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள முடியவில்லை.

ஆனால் நான் அவரை இப்போது மறந்துவிட்டேன். உன்னை கடைசி வரையிலும் நன்றாக பார்த்துக்கொள்வேன் என தனது புது மனைவியிடம் கூறியுள்ளார் வெற்றிவேல்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இதனை அடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது மணமகள் சூர்யா முதல் இரவு அறையில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து பதறிப்போன வெற்றிவேல் இதுகுறித்து பெற்றோரிடம் கூற அவர்கள் சூர்யாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், “தன் கணவர் சைகோ போல நடந்து கொள்வதாகவும், மேலும் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி முடியை வெட்டி, மயக்க மாத்திரை கொடுத்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்”.

ஆனால் மணமகன் அப்படி ஏதும் நான் செய்யவில்லை எனவும், சூர்யா பொய் சொல்வதாகவும் கூறியுள்ளார். இதனால் 2 குடும்பத்தினர் மத்தியிலும் சலசலப்பு எழுந்ததை அடுத்து காரைக்குடி டி.எஸ்.பி., அருண் புது மண தம்பதி இருவரிடரும் விசாரணை மேற்கொண்டார்.

டி.எஸ்.பி., அருண் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மணமகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், பெற்றோர் வற்புறுத்தியதாலையே அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாகவும், கணவனை பழிவாங்க திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியதும், உண்மையிலயே மணமகன் வெற்றிவேல் நிரபராதி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

மணமகள் சூர்யா நடத்திய நாடகத்தால் இருவரின் பெற்றோரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img