புது தில்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராம் சுந்தர் தாஸ் தனது 95 ஆவது வயதில் காலமானார். வெள்ளிக்கிழமை இன்று பாட்னாவில் அவர் தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவை அடுத்து, பீகார் அரசு இரு நாட்கள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப் படும் என்று கூறியுள்ளது. ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது, அவர் 1979ல் பீகார் முதல்வராகப் பதவி வகித்தவர். அவருக்கு இரு மகன்கள் ஒரு மகள். அவரது இறுதிச் சடங்கு கங்கைக் கரையில் பங்க்ஸ்கட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம் சுந்தர் தாஸின் மறைவுக்கு அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்
பீகார் முன்னாள் முதல்வர் ராம்சுந்தர் தாஸ் காலமானார்
Published:

