நேற்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்துள்ளது.
நேற்று குமரிக்கடல் பகுதியிலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் வரை தமிழக, தென் ஆந்திரக் கடற்கரையோமாக நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை இன்றும் நிலவுகிறது. இது தரை மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீடிக்கிறது.
இதன் காரணமாக இன்றும் தமிழக, தென் ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்துள்ள மழை விவரம் – (சென்டிமீட்டரில்) –
மிகக் கனமழை பெய்துள்ள இடங்கள் (12 செ,மீக்கு மேல் -) ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) 18;
காஞ்சிபுரம் 16; மரக்காணம் (விழுப்புரம்) 12,
கனமழை பெய்துள்ள இடங்கள் (7 செ.மீக்கு மேல்) –
வானமாதேவி (கடலூர்) 11;
கும்மிடிபூண்டி (திருவள்ளூர்) & மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 10;
திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 9;
செய்யாறு (செங்கல்பட்டு), கடலூர், ஆரணி (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, செங்கல்பட்டு, இந்துஸ்தான் பல்கலைக் கழகம், மதுராந்தகம் தலா 8;
செம்பரம்பாக்கம், பரங்கிப்பேட்டை, வந்தவாசி (திருவண்ணாமலை) அரவக்குறிச்சி (கரூர்) சிதம்பரம், மேற்கு தாம்பரம் தலா 7;
மழை பெய்துள்ள பிற இடங்கள் –
திருவள்ளூர், செஞ்சி, ஊத்துக்கோட்டை, பெரம்பலூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலைஅ), கொரட்டூர், சாத்த்டனூர் அணை, மதுக்கூர் (தஞ்சை), திருவாலங்காடு தலா 6;
இன்னமும் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
- முனைவர் கு.வை.பா வானிலை அறிக்கை 16.11.2020