ரூ.18000 தான் இந்த மாஸ்க்! ஆஸ்கார் இசைபுயலின் மாஸ்க்கின் அம்சம்..!

சற்றுமுன் தமிழகம்
ar rahuman
ar rahuman

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது மகனுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். தடுப்பூசி செலுத்தியபின் அதனை புகைப்படமாக எடுத்து ‘தடுப்பூசி போட்டாச்சு… நீங்க..?’ என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துகொண்டார்.

இந்தப் புகைப்படம் இன்று மற்றொரு காரணத்திற்காக வைரலானதுடன் பேசுபொருளாகவும் ஆனது. அது அவர் அணிந்திருந்த முகக்கவசத்திற்காக தான். வித்தியாசமாக இருந்த அந்த முகக்கவசத்தோடு எடுத்துக்கொண்ட செல்பியை அடுத்து அந்த முகக்கவசம் பற்றி நெட்டிசன்கள் அலசத் தொடங்கி விட்டனர்.

ஏனென்றால், அவர் அணிந்திருந்த முகக்கவசம் சாதாரணமானது போல் இல்லாமல் ஹைடெக்காக இருந்தது. இதையடுத்து தான் அந்த முகக்கவசம் எங்கு கிடைக்கும் என்ன விலை என்பது போன்ற கேள்விகள் ரஹ்மானின் பதிவில் வட்டமிடத் தொடங்கியது.

அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ரஹ்மான் அணிந்திருந்த ஹைடெக் முகக்கவசம் எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த முகக்கவசத்தின் இரு புறங்களிலும் காற்று சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்பான்கள் வெளியே இருந்து காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மாஸ்க்கை போல் இல்லாமல் இதனை எத்தனை மணிநேரங்கள் வேண்டுமானாலும் இடையூரின்றி அணிந்துகொள்ள முடியும்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

சுத்திகரிப்பான்கள் மட்டுமின்றி முகக்கவசத்தில் சென்சார் ஒன்றும் பொருந்தப்பட்டிருக்கிறது. இது மாஸ்க் அணிந்திருப்போரின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவைமாற்றிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் UV-LED ஒளியும் பொருத்தப்பட்டுள்ளது.

இது முகக்கவசம் அணிந்திருக்கும் போது கிருமிகள் நம்மை நெருங்காத வண்ணம் காத்துக்கொள்ளப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் மூலம் முகக்கவசம் அணிந்திருப்போர் சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கவும், மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படாத வண்ணமும் சுவாசிக்க முடியும்.

இதற்கிடையே, இந்த முகக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு தொழில்நுட்பமும் மாற்றத்தக்கவை. அதேபோல், மறுசுழற்சி செய்ய முடியும். இதில் இருக்கும் 820 mAh பேட்டரியை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் Low-power mode-ல் 8 மணிநேரமும், High-power mode-ல் 4 மணிநேரமும் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 30 நாட்கள் இதை பயன்படுத்திய பிறகு அதில் உள்ள ஃபில்டர்களை மட்டும் மாற்ற வேண்டும். இவ்வளவு அம்சங்கள் கொண்ட ஹை-டெக் மாஸ்க்கின் விலை எவ்வளவு தெரியுமா?

இதன் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 249. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை சுமார் 18 ஆயிரம் ஆகும்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.