
தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த முறை ஆகஸ்ட் 1 முதல் இந்த முறை செயல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். இதன் மூலம் இப்போது வங்கிகளின் விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கி கணக்கிற்கு சம்பளம் வரும், உங்கள் இ.எம்.ஐ யும் நீங்கள் டெபாசிட் செய்யலாம்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் பணவியல் கொள்கைக் குழுவின் மதிப்பீட்டை குறித்து பேசும் போது இந்த மாற்றத்தை அறிவித்தார்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முறையை மாற்றியமைத்து வருவதாக அவர் கூறினார். NACH என்பது ஒரு ஆன்லைன் கட்டண முறையாகும், இது மொத்தமாக செலுத்த பயன்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றத்தை செயல்படுத்துவதன் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி, வீடு, கார் மற்றும் தனிநபர் கடன் இஎம்ஐ, தொலைபேசி உட்பட அனைத்து பில்களும் வங்கி விடுமுறை நாட்களில் கூட உங்கள் கணக்கிலிருந்து செலுத்தலாம்.
இதற்காக, தேவையான கட்டணத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான நிலுவை வைத்திருக்க வேண்டும். இது தவிர, வங்கி விடுமுறை இருந்தபோதிலும், உங்கள் சம்பளம் உங்கள் கணக்கில் வரும்.
ஒரே நேரத்தில் பல நபர்களின் கணக்குகளுக்கு பணம் அனுப்ப NACH அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த முறை ஈவுத்தொகை, வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற மொத்தமாக செலுத்த பயன்படுத்தப்படுகிறது.
பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..